UPDATED : நவ 13, 2013 12:00 AM
ADDED : நவ 13, 2013 01:02 PM
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பிற வாரியங்களில் அத்தேர்வெழுதிய மாணவர்களைவிட, சிறப்பான செயல்பாடு மற்றும் சுய மேம்பாடு ஆகியவற்றில் திறமையாக செயல்பட்டுள்ளனர் என்று CBSE மேற்கொண்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது.
இந்த சர்வே 30,000 மாணவர்களிடம் எடுக்கப்பட்டது. இதைப்பற்றி CBSE வட்டாரங்கள் கூறியதாவது: ஆசிரியர்கள் அதிக பொறுப்புடன் செயல்படும் வகையிலான பள்ளித் தேர்வுகளை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலுள்ள 13,000 பள்ளிகளில், வெறும் 68 பள்ளிகள் மட்டுமே, தங்களின் மாணவர்களை சிறப்பான வகையில் மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையைக் கொண்டுள்ளன என்று ஆய்வில் தெரியவருகிறது.
CBSE கல்வி முறையை, மாணவர்கள் இன்னும் அதிகமாக விரும்பும் வகையில் பல மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்புவரை, CBSE -ல் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையோர், தங்களின் உயர்நிலைக் கல்வியை அதே வாரியத்தில் தொடர்வதில்லை.
அப்படி தொடர விரும்பும் சில மாணவர்களும், பள்ளி அடிப்படையிலான தேர்வுகளை மேற்கொள்வதில்லை. பல மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 2 தேர்வுக்கான ஒரு முன்னோட்டமாக இருப்பதாக கருதுகின்றனர். இதனாலேயே, பலரும் பத்தாம் வகுப்பில் வாரிய தேர்வை எழுதுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
