UPDATED : டிச 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: தமிழக போக்குவரத்துத்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் நேரு, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திற்கு டிச. 15ம் தேதி வந்தார்.
அங்குள்ள கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்த பண்ணைக்கருவிகளை பார்வையிட்டார். சிறிய கூட்டு நெல் அறுவடை இயந்திரம், குழல் மண்வெட்டி, நெல் நாற்று நடவும் இயந்திரம், சொட்டு நீர்ப்பாசன முறை, நிலப்போர்வை, பசுமைக்குடில், மழைநீர் சேகரிக்கும் தொழில்நுட்பம், தாவர எரிவாயு, காட்டாமணக்கு உற்பத்தி, புதிய வீரிய ஒட்டு நெல், மக்காச்சோளம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
மத்திய அரசு வழங்கிய 50 கோடி ரூபாயில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிதியில் இருந்து பல்கலையின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு புதிய பண்ணைக்கருவிகள், 10 டிராக்டர், 11 பவர் டிரில்லர், இயந்திரத்தால் இயங்கும் களையெடுக்கும் கருவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, பதிவாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
