தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசு ஒத்துழைக்கணும்’

‘ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசு ஒத்துழைக்கணும்’

‘ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசு ஒத்துழைக்கணும்’


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை:
தவறு செய்யும் கல்லூரி ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலை., தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இச்சங்க கூட்டம் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் டிச. 15ம் தேதி நடந்தது. துணைத்தலைவர் சிவநாத், பொதுச் செயலர் ஆதிநாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
போடி கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி: எங்கள் கல்லூரியில் 2003 வரை மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. பின்பு பல பிரச்னைகள் உருவானதால் தேர்தலை நிறுத்தி விட்டோம். வருவாய் அலுவலர்கள், போலீசார், பெற்றோர் கூடி, ‘இனி எந்த சூழ்நிலையிலும் தேர்தல் நடத்த மாட்டோம்’ என முடிவெடுக்கப்பட்டது.
மூட்டா அமைப்பினர் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்வதாக கூறி, மாணவர்களை கல்லூரியில் முற்றுகையிட வைத்தனர். பலவகைகளில் இடையூறாக இருந்ததால் 3 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த 10 நாட்களாக ஒரு மணி நேரம் வகுப்பு நடத்தி விட்டு மாணவர்களை அனுப்பி விடுகின்றனர். தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்போது அரசு உதவுவதில்லை.
சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் நாராயணராஜா: நாம் கல்லூரியில் கமிட்டிகளை முறையாக அமைப்பது, ஆதரவு தெரிவிக்கும் சங்கங்களுடன் இணைந்து செயல்படுவதுடன், முறையான சட்டஆலோசனையை பெற வேண்டும்.
பொருளாளர் மகேந்திரவேல்: இதில் ஒற்றுமையை வெளிப்படுத்தாதது நமது குறை. தொழிற்சாலைகள் கடையடைப்பு நடத்துவதைப்போல நாமும் அடையாள வேலை நிறுத்தமாக ஒரு நாள் கல்லூரியை மூடலாம். மாணவர்கள் ஒத்துழைப்பை பெற்றோர் மூலம் பெற வேண்டும்.
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன்: ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக நாமும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஓட்டல்களில் கூட கண்காணிப்பு கேமரா இருக்கும்போது, கல்லூரிகளில் இருக்கக் கூடாதா?
டாக்டர் ஆர்.லட்சுமிபதி: கோடிக்கணக்கில் செலவிட்டு கல்லூரி நடத்தும்போது கண்காணிக்க கேமரா வைப்பது கல்லூரி சொத்தை பாதுகாக்கும் நடவடிக்கை. அது நமது கடமை. அதில் என்ன தவறு உள் ளது. இதில் என்ன மனித உரிமை உள்ளது. அப்படி கூறுவது அவர்களின் யுக்தி. நாமும் இணை இயக்குனரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கடிதம் எழுத வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறுவழியின்றி ஒரு நாள் அடையாளமாக வேலை நிறுத்தம் செய்யலாமா?
திண்டுக்கல் ரமாபிரபா கல்லூரி முதல்வர் இஸ்மாயில்: உடனடியாக நாம் இணை இயக்குனரை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் ஆலோசனை செய்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கல்லூரி குழுவின் முடிவுப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை கல்லூரி இயக்குனர் அலுவலகம் ஏற்பு செய்ய வேண்டும். மேலும், நிர்வாகத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்.
தவறினால் மதுரை காமராஜ் பல்கலை., தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் சங்கம் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடும். கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி, அரசு உடனே நிரப்ப உத்தரவிட வேண்டும். ஏற்கனவே நிரப்பப்பட்ட ஆசிரியரல்லாத பணியாளர் நியமனத்திற்கான ஒப்புதலை அரசு உடனே வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us