வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் ‘மட்டம்’: நாடாளுமன்றத்தில் புகார்
வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் ‘மட்டம்’: நாடாளுமன்றத்தில் புகார்
UPDATED : டிச 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு வராமல் இருப்பது அதிகரித்துள்ளது என்று ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி., கியான் பிரகாஷ் பிலானியா கூறினார்.
பீகாரில் ஐந்தில் இரண்டு ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு வருவது இல்லை. உ.பி.,யிலும் இதே நிலைமை தான். இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசு, உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிலானியா கூறினார்.
