தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை பல்கலை துணைவேந்தருக்கு கவுரவ ‘கர்னல் கமான்டன்ட்’ பதவி

கால்நடை பல்கலை துணைவேந்தருக்கு கவுரவ ‘கர்னல் கமான்டன்ட்’ பதவி

கால்நடை பல்கலை துணைவேந்தருக்கு கவுரவ ‘கர்னல் கமான்டன்ட்’ பதவி


UPDATED : டிச 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
சென்னை, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் தங்கராஜூக்கு, தேசிய மாணவர் படையின் கவுரவ கர்னல் கமான்டன்ட் பதவி வழங்கும் விழா டிச. 17ம் தேதி நடந்தது.
தமிழ்நாடு, அந்தமான் மற்றும் நிகோபார் தேசிய மாணவர் படையின் டெபுடி டைரக்டர் ஜெனரல் சர்தாஜ் இமாம், துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் கமான்டன்ட் பதவியேற்று வைத்து பேசும்போது, ‘1948ம் ஆண்டு ஜவகர்லால் நேருவால் 32 ஆயிரத்து 500 பேருடன் தேசிய மாணவர் படை ஆரம்பிக்கப்பட்டது. 60 ஆண்டு நிறைவு பெற்ற இப்படையில், தற்போது 13 லட்சம் மாணவர்கள் இருக்கின்றனர்.
தேசிய மாணவர் படையில் சேர்ந்தால் சுயஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றுடன் அண்டை மாநிலங்கள், இங்கிலாந்து, சிங்கப்பூர் உட்பட 16 அயல்நாடுகளுக்கு முகாம் சென்று, அவர்களது கலாசாரத்தை அறிந்து கொள்ள உதவும்’ என்றார்.
கவுரவ கர்னலாக பதவியேற்றுக் கொண்ட துணைவேந்தர் தங்கராஜூ பேசும் போது, ‘கால்நடை மருத்துவ பல்கலை மாணவர்கள் பலர் தேசிய மாணவர் படையில் சேர்ந்து ராணுவத்தில் உயர் பதவி வகித்து வருகின்றனர். இந்திய ராணுவத்திற்குத் தேவையான மனிதவளத் தேவையை என்.சி.சி., பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த 1981ம் ஆண்டில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 120 என்.சி.சி., மாணவர்கள் டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று 10 தங்கம், எட்டு வெள்ளி, 25 வெண்கல பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்,’ என்றார்.
கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லலிதா ஜான் வரவேற்றார். என்.சி.சி., அதிகாரிகள் உமர் பரூக், மஜ் ஹரேந்திர திவாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us