தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்மசி படிக்க ‘கேட்’ தேர்வு தேவையில்லை!

பார்மசி படிக்க ‘கேட்’ தேர்வு தேவையில்லை!

பார்மசி படிக்க ‘கேட்’ தேர்வு தேவையில்லை!


UPDATED : டிச 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) ஆகிய கல்வி நிறுவனங்கள் இன்ஜினியரிங், ஆர்கிடெக்சர், லைப் சயின்சஸ் உட்பட 74 விதமான படிப்புகளில் சேர ‘கேட்’ தேர்வை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பார்மசி படிப்பிற்கு வரும் 2010 முதல் கிராஜுவேட் ஆப்டிடியூட் தேர்வு (கேட்) தேர்வு நடத்தப்படாது என்று தெரியவந்துள்ளது.
‘முதுநிலை பார்மசி படிப்பிற்கான நுழைவுத் தேர்வை தேசிய ஒருங்கிணைப்பு குழு  விலக்க முடிவு செய்துள்ளதாக, ஐ.ஐ.டி., ரூர்க்கி இயக்குனர் சாக்செனா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
‘ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனங்கள் பார்மசி பாடத்திற்கான கேட் தேர்வு நடத்துவதற்கு மற்ற பார்மசி கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்களையே நம்பியுள்ளது. இந்த கல்வி நிறுவன தரத்திற்கு ஆசிரியர்கள் கிடைப்பதும் மிக கடினமானதாக உள்ளது‘ என்று ஐ.ஐ.டி., கவுகாத்தி இயக்குனர் கவுதம் பருவா குறிப்பிட்டுள்ளார்.
‘கேட்’ தேர்வு தகுதியில் இருந்து பார்மசி படிப்பை விலக்கிக்கொள்வதை எதிர்த்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை அணுக மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுவரை இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரமான முறையில் அட்மிஷன் நடத்தப்பட்டு வருவதே இதற்கு காரணம்.
முதுநிலை பார்மசி படிப்பதற்காக கணிசமான இன்ஜினியரிங் படித்தவர்கள் ‘கேட்’ தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு 20 ஆயிரம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் ‘கேட்’ தேர்வு எழுதினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us