தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.80,000 ஸ்காலர்ஷிப்: மத்திய அரசு

அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.80,000 ஸ்காலர்ஷிப்: மத்திய அரசு

அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.80,000 ஸ்காலர்ஷிப்: மத்திய அரசு


UPDATED : டிச 19, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதனால், அறிவியல் சார்ந்த பல ஆராய்ச்சிகளுக்கு மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது. அது போல, கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் உட்பட பல ஆசிரியர் பதவிகளுக்கு ஆள் இல்லை.
அடுத்த இரண்டாண்டில், கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும்; ஆராய்ச்சிப் படிப்புகளும் அடியோடு மங்கி விடும். இந்த ஆபத்தை உணர்ந்த மத்திய அரசின்  அறிவியல்  தொழில்நுட்ப  அமைச்சகம், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்ஜினியரிங், மருத்துவம் என்று போகும் மாணவர்களை திசை திருப்பி, பி.எஸ்சி., எம்.எஸ்சி., படிப்புகள் மீது ஆர்வம் காட்டும் வகையில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டத்தை அமைச்சகம் தீட்டியுள்ளது. இதை சமீபத்தில், பிரதமர் மன்மோகன் சிங் முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.
ஐ.ஐ.டி.,யில் நுழைவுத் தேர்வு எழுதி, முதல் 10,000 பேரில் ஒருவராக வரும் மாணவரும், அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வில் முதல் 20 ஆயிரம் பேரில் ஒருவராக வரும் மாணவரும், அறிவியல் படிப்பை தேர்வு செய்தால், இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதுபோல, மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அறிவியல் படிக்க விரும்பினால், அவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் பெற தகுதி உண்டு.
மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பத்தாவது, பிளஸ் 2 தேர்வுகளில் முதலில் வரும்  ஒரு சதவீத  மாணவர்களும், உயர் படிப்புக்கு இந்த ஸ்காலர்ஷிப் பெற தகுதி உள்ளது. இப்படி ஆண்டுக்கு அதிகபட்சமாக 10,000  மாணவ,மாணவிகளுக்கு தலா  80 ஆயிரம் ரூபாய்  உதவித்தொகை தர மத்திய அறிவியல் தொழில்நுட்ப  அமைச்சகம்  முடிவு செய்துள்ளது.  பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டில் இருந்து இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்கும். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களும், ஒலிம்பியாட் தேர்வில் சாதித்தவர்களும் கூட இதில் உதவி பெற தகுதி உண்டு.
இது மட்டுமின்றி, பள்ளி அளவில் அறிவியல் ஆய்வு திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு அமல்படுத்துகிறது. ஏழாவது முதல் பத்தாவது வரை படிக்கும் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டத்தில் உதவி கிடைக்கும்.
அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கி உள்ளது. இனி வரும் தலைமுறையினரும் இப்படி அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடாமல் கைநிறைய சம்பாதிக்கும் நோக்கத்தில் திசை மாறிப்போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த உதவித்தொகை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ‘குறைந்தபட்சம் இந்த மாணவர்களில் 20 சதவீதம் பேராவது ஆராய்ச்சியில் ஈடுபடுவார்களானால், அதுவே இந்த திட்டத்தின் வெற்றி’ என்று தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us