தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக அமைதியை வலியுறுத்தி ஆஸ்திரியா பேராசிரியர் சைக்கிள் பயணம்

உலக அமைதியை வலியுறுத்தி ஆஸ்திரியா பேராசிரியர் சைக்கிள் பயணம்

உலக அமைதியை வலியுறுத்தி ஆஸ்திரியா பேராசிரியர் சைக்கிள் பயணம்


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலக அமைதி வேண்டியும், மனித நேயத்தை பகிர்ந்து கொள்ளவும் ஆஸ்திரியா நாட்டு பேராசிரியர்கள் சைக்கிள் பயணம் செய்து வருகின்றனர்.
உலக அமைதி, சுற்றுப்புற சூழல் காத்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும், மனிதநேயத்தை உலக மக்களிடம்பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்து ஆஸ்திரியா நாட்டில் உள்ள க்ராஸ் பல்கலை.,யின் புவியியல் பேராசிரியர்கள் பிளிப் ஸ்சாதி(35), வல்ஸ்கா ஸ்சாதி(30) ஆகியோர்  2006 அக்டோபரில் தாய்நாட்டில் இருந்து சைக்கிள் பயணம் துவங்கி உலகத்தை வலம் வந்து கொண்டுள்ளனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் பயணம் முடித்து 2008 டிசம்பர் 8ல் இந்தியா வந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இவர்கள் கூறியதாவது:
உலக அமைதிக்காகவும், மனித நேயத்தை உலக மக்களிடம் பகிர்ந்து கொள்ளவும் சைக்கிள் பயணம் செய்து வருகிறோம். இதுவரை முடிந்த பயணத்தில் 99 சதவீகிதத்திற்கும் மேல் மனித நேயம் நல்ல முறையில் உள்ளது.  பெரும்பாலான மனிதர்கள் அமைதியை விரும்புகின்றனர். இதேநிலை நீடித்தால் உலக அமைதி விரைவில் கிடைக்கும். பிறருக்கு உதவும் மனப்பான்மை மக்களிடம் அதிகரித்து வருகிறது.
எங்கள் பயணத்திற்கு அனைத்து இடங்களிலும் உதவிகள் கிடைத்து வருகிறது. இதுவரை 39ஆயிரம் கிலோ மீட்டர்  தூரம் கடந்துள்ளோம். இந்தியாவில் 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளோம். இந்தியாவை தொடர்ந்து நேபாளம், திபெத், தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா நாடுகளை கடந்து ஸ்பெயின் நாட்டில் இந்தபயணத்தை முடிக்க உள்ளோம். இந்த உலக அமைதி பயணத்தை 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us