தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/14 மாதங்களாக சம்பளமின்றி தவிக்கும் ஆசிரியர்கள்

14 மாதங்களாக சம்பளமின்றி தவிக்கும் ஆசிரியர்கள்

14 மாதங்களாக சம்பளமின்றி தவிக்கும் ஆசிரியர்கள்


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


தேனி:
பள்ளிக்கல்வித்துறையில் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு 14 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.
தமிழகம் முழுவதும் 320 அரசு பள்ளிகளில் உடல் ஊனமுற்றவர்களுக்காக 290 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1982ம் ஆண்டில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சி.பி.எம்., நிறுவனத்தால் துவக்கப்பட்ட இத்திட்டத்தை 1998ம் ஆண்டிற்கு பிறகு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து தாமதமாக நிதி ஒதுக்கீடு பெறுவதாக கூறி 10 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கால தாமதமாக சம்பளம் வழங்குகிறது. 2007, அக்., முதல் இதுவரை சம்பளம் வழங்கவில்லை.
ஒராண்டிற்கும் மேல் சம்பளத்தை நிலுவையில் வைத்து வழங்குவதால் ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கு காத்திருக்காமல் பள்ளிக்கல்வித்துறை மற்ற ஆசிரியர்களை போல சிறப்பு ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us