தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் ஒரு லட்சம்

கோவையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் ஒரு லட்சம்

கோவையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் ஒரு லட்சம்


UPDATED : டிச 23, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 65, 914 பேர் பத்தாம் வகுப்பு தேர்வும், 39,865 பேர் பிளஸ் 2 தேர்வும் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவ, மாணவியர் இத்தேர்வு எழுதுகின்றனர். இந்தாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இத்தேர்வுகளை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை துரிதப்படுத்தியுள்ளது. தேர்வு எழுதும் மொத்த மாணவர்கள், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள், பார்வையற்ற மாணவர்கள், கை, கால் ஊனமுற்ற மாணவர்கள் எண்ணிக்கை பள்ளி வாரியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு டிசம்பருக்குள் பாடங்களை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், காலை, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவியர் எண்ணிக்கையே அதிகம்.
எஸ்.எஸ்.எல்.சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 77 பள்ளிகளை சேர்ந்த 13,223 மாணவர்கள், திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 106 பள்ளிகளை சேர்ந்த 18,735 மாணவர்கள், கோவை கல்வி மாவட்டத்தில் 126 பள்ளிகளை சேர்ந்த 20,019 மாணவர்கள் என, மொத்தம் 309 பள்ளிகளை சேர்ந்த 51,977 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர்.
மெட்ரிக்: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 44 பள்ளிகளை சேர்ந்த 1,746 பேர், திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 101 பள்ளிகளை சேர்ந்த 4,028 பேர், கோவை கல்வி மாவட்டத்தில் 153 பள்ளிகளை சேர்ந்த 7,771 பேர் என மொத்தம் 298 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 13,545 பேர் மெட்ரிக் தேர்வு எழுதுகின்றனர். ஆங்கிலோ இந்தியன்: பொள்ளாச்சி, திருப்பூர் கல்வி மாவட்டங்களில் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் இல்லை. கோவை கல்வி மாவட்டத்தில் மட்டும் மூன்று ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை சேர்ந்த 392 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர்.
கோவை வருவாய் மாவட்டத்தில் மூன்று கல்வி முறைகளையும் சேர்த்து, 610 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 65,914 மாணவ மாணவியர் இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வை சந்திக்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வு: மார்ச் மாதம் நடைபெறவுள்ள பனிரெண்டாம் வகுப்பு தேர்வை, இந்தாண்டு மொத்தம் 39,865 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 23 அரசுப் பள்ளிகள், மூன்று நகராட்சிப் பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் பள்ளிகள், 27 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 9,006 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 32 அரசுப் பள்ளிகள், ஐந்து மாநகராட்சிப் பள்ளிகள், 17 உதவி பெறும் பள்ளிகள், ஒரு சுய உதவி பள்ளி, 53 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 12,512 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
கோவை கல்வி மாவட்டத்தில் 23 அரசுப் பள்ளிகள், 16 மாநகராட்சிப் பள்ளிகள், 28 உதவி பெறும் பள்ளிகள், ஒரு சுய உதவி பள்ளி, 98 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 18,347 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 337 பள்ளிகளை சேர்ந்த 39,865 மாணவ மாணவியர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் நடைபெறும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us