தமிழகம் முழுவதும் பின் தங்கிய பகுதிகளில் 38 மாதிரிப் பள்ளிகள்
தமிழகம் முழுவதும் பின் தங்கிய பகுதிகளில் 38 மாதிரிப் பள்ளிகள்
UPDATED : டிச 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
விருதுநகர்: இந்தியா முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் ஆண், பெண் கல்வி விகிதாச்சார அடிப்படையில் அதிக வித்தியாசம் உள்ள பின் தங்கிய பகுதிகளில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் போல் மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்படும் என 2007ல் மத்திய அரசு அறிவித்தது. அதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் கல்வி விகிதாச்சாரம் அதிக வித்தியாசம் உள்ள ஈரோட்டில் 6 பள்ளிகளும், கடலூரில் 3, தர்மபுரியில் 3, கிருஷ்ணகிரியில் 3, கரூரில் 1, நாமக்கல்லில் 1, சேலத்தில் 10 , சிவகங்கையில் 1, திருவண்ணாமலையில் 2 , விழுப்புரத்தில் 7, விருதுநகரில் 1 பள்ளியும் துவங்கப்படவுள்ளது.
இந்தியா முழுவதும் முதற்கட்டமாக 2,500 பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படவுள்ளது. மாதிரிப்பள்ளிகளுக்கு 5 முதல் 10 ஏக்கர் வரை இடம் ஒதுக்கவும், கட்டடம் கட்டுவதற்கு ஓவ்வொரு பள்ளிக்கும் தலா 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், கம்ப்யூட்டர், தொலைத்தொடர்பு உள்ளிட்ட வசதிகளுடன் கம்ப்யூட்டர், யோகா,கலை, ஓவியம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கல்வி விகித்தார அடிப்படையில் பின் தங்கியுள்ள நரிக்குடி ஒன்றியத்தில் இப்பள்ளி அமைக்கப்பட உள்ளது.
