UPDATED : ஜன 16, 2009 12:00 AM
ADDED : ஜன 16, 2009 04:48 PM
என்.சி.இ.ஆர்.டி., என்னும் தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையம் தனது பாடப் புத்தகங்களை 12 மாநிலங்கள் மொழி பெயர்த்து அவற்றின் பள்ளிகளில் பயன்படுத்துவதற்கான காப்பிரைட் உரிமையை வழங்கியுள்ளது.
ஆந்திரா, சிக்கிம், உத்தர்காண்ட், இமாச்சல பிரதேசம், டில்லி, ஜார்க்கண்ட், பீகார், சட்டீஸ்கர், அரியானா, கேரளா, பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 12 மாநிலங்களுக்கு இந்த அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 31.3 சதவீத மாணவர்களுக்கு என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப்புத்தகங்களை பயன்படுத்திக் கல்வி பயிலும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட வரைவின் மூலமாக இந்த முயற்சி நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாநில அரசின் பாடத்திட்டத்தை பயில்பவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள இந்த முயற்சி மிகவும் உதவும் என நம்பப்படுகிறது. பாடங்களுக்கான பகுதிகளை என்.சி.இ.ஆர்.டி., வழங்கிடும் என்றும் அந்தந்த மாநில அரசுகள் இவற்றை புத்தக வடிவில் அச்சிடுதல் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடும் என்றும் என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.
