UPDATED : ஜன 17, 2009 12:00 AM
ADDED : ஜன 17, 2009 10:19 AM
ஐ.ஐ.எம்., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏழு ஐ.ஐ.எம்.,களில் சேருவதற்காக 2.76 லட்சம் பேர் இந்த நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர். இதிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் பேர், குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். அதன் அடிப்படையில், ஐ.ஐ.எம்.களில் சேருவதற்கு ஆயிரத்து 750 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., இறுதியாண்டு படிக்கும் மாணவரான பாரத் விஜயராகவன், கேட் நுழைவுத் தேர்வில் 99.49 சதவீதம் பெற்றுள்ளார். அவருக்கு ஆமதாபாத், பெங்களூரு, கோல்கட்டா, கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.எம்.,களிலிருந்து அழைப்பு வந்துள்ளது.
எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வைத்தியநாதன், 97.99 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக கேட் தேர்வு எழுதி இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்றுள்ளார். இதேபோல, நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள பல மாணவர்களுக்கு பல்வேறு ஐ.ஐ.எம்.,களிலிருந்து குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்துள்ளது.
