தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் துறையில் திறன் பற்றாக்குறை

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் துறையில் திறன் பற்றாக்குறை

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் துறையில் திறன் பற்றாக்குறை


UPDATED : ஜன 17, 2009 12:00 AM

ADDED : ஜன 17, 2009 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2009 12:00 AM ADDED : ஜன 17, 2009 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எந்த செய்தியைப் பார்த்தாலும் ஆட்கள் குறைப்பு என்பதே நடப்பாக இருக்கையில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் துறையில் மட்டும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.
பெங்களூரு, ஐதராபாத், டில்லி ஆகிய இடங்களில் இந்தத் துறை நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது இத்துறைக்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுவதாக இத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குடும்பப் பெண்மணிகள் மற்றும் பட்டதாரிகள் இத்துறையில் அதிகமாக பணி புரிகிறார்கள்.
வீட்டிலிருந்தபடியே பணி புரியும் வாய்ப்பை இத்துறை தருகிறது. தற்போதைய பொருளாதார மந்த நிலையில் அதிகம் பாதிக்கப்படாத துறை இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இத்துறையில் அதிக நிதி நெருக்கடி இல்லை. இதனால் இந்திய மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் நிறுவனங்கள் பெறும் அவுட்சோர்சிங் பணிகள் குறையாது என்றே துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us