ஐ.ஐ.டி.ஜே.இ.இ., இலவச பயிற்சி விண்ணப்பிக்க ஜன. 22ம் தேதியே கடைசி!
ஐ.ஐ.டி.ஜே.இ.இ., இலவச பயிற்சி விண்ணப்பிக்க ஜன. 22ம் தேதியே கடைசி!
UPDATED : ஜன 21, 2009 12:00 AM
ADDED : ஜன 21, 2009 07:21 PM
அடுத்த கல்வியாண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு தொடர இருக்கும் இப்பயிற்சிக்கான போட்டித் தேர்வு ஜன.25ம் தேதி சென்னையில் நடக்கிறது. ‘பிட்ஜி’ (FIITJEE) நடத்தும் இந்த போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. பெற்றோரின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள் உள்ள, மாணவர்கள் மட்டுமே இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அடுத்த கல்வி ஆண்டு முதல், இதற்கான பயிற்சி சென்னை ‘பிட்ஜி’ நிறுவனத்தில் வழங்கப்படும். தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு துவக்கத்திலிருந்து 4 ஆண்டுகளுக்கு பயிற்சி பெற்று 2013ம் ஆண்டில் நுழைவுத் தேர்வு எழுதுவார்கள். தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ‘பிளஸ் 1’ துவக்கத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சி பெற்று 2011ம் ஆண்டில் நுழைவுத் தேர்வு எழுதுவார்கள். எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆண்டுக்கு ஆண்டு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கடின உழைப்பு மற்றும் முறையான வழிகாட்டுதல் ஆகியன இத்தேர்வில் வெற்றி பெற உதவும். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய அதே சமயம் திறமையான மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று தேர்வில் வெற்றி பெற இத்திட்டம் உதவும்.
கேள்விகளை கற்பனை செய்து பார்க்க வைத்து, அதை முழுமையாக புரிந்து கொள்ள ஸ்டுடியோ வழியாகவும் மாணவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் தேர்வில் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு பதில் அளிக்க பயிற்சி உதவும். பிட்ஜி நிறுவனத்தில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர்கள். இவர்கள் அனைவரும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு எழுதி தேர்வானாவர்கள் என்பதால் அவர்கள் அளிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் உதவும்.
விண்ணப்பப்படிவங்களை இலவசமாக டவுண்லோட் செய்ய: http://www.kalvimalar.com/fiitjee_entranceexam.asp
கூடுதல் விபரங்களைப் பெற தொடர்பு கொள்ள: 044-4285 9701
