மெட்டீரியல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கு
மெட்டீரியல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கு
UPDATED : ஜன 22, 2009 12:00 AM
ADDED : ஜன 22, 2009 02:47 PM
சென்னை: மெட்டீரியல் தொழில்நுட்பத்தில் நவீன மாற்றங்கள் தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
இரண்டு நாள் கருத்தரங்கை இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணை வேந்தர் வி.என்.ராஜசேகர பிள்ளை துவக்கி வைத்தார். மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
துவக்க நாளன்று கல்லூரியின் தலைவர் ஏ.சி.முத்தையா தலைமை உரையாற்றினார். ‘டில்லி இரும்புத் தூண், சோழர் வெண்கல சிலைகள், சிதம்பரம் கோவில் தங்கக் கோபுரம் போன்றவை, நமது முன்னோர்களின் சாதனைகளில் சில’ என்று குறிப்பிட்டார்.
துவக்க உரையாற்றிய ராஜசேகரன் பிள்ளை, உலோக தொழில்நுட்பம், தற் போதைய நவீன உலகில், அதன் பயன் பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்டார். கருத்தரங்கின் அமைப்பாளர் சிவானந்தத்தை கல்லூரியின் முதல்வர் ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்து, வரவேற்புரையாற்றினார்.
வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் புட்டி ரட்னர், ‘பாலிமர்களில் இருந்து மருந்துகள், அதிலிருந்து உலோகங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தேசிய ஏரோஸ்பேஸ் லாபரட்டரீஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.வி.கே.ராவ் உள்ளிட்டோர் முக்கிய தலைப்புகளில் உரையாற்றினர்.
