தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தில் ஜப்பானியர்கள்

ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தில் ஜப்பானியர்கள்

ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தில் ஜப்பானியர்கள்


UPDATED : ஜன 23, 2009 12:00 AM

ADDED : ஜன 23, 2009 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2009 12:00 AM ADDED : ஜன 23, 2009 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆங்கிலத்தை கற்றுக் கொள்வதற்காக, அதை பாடமாக எடுப்பவர்களும் உள்ளனர். இதற்காக, புத்தகக் கடைகளில், ஆங்கில மொழி புத்தகங்களுக்கென தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பொதுவாக, பெரிதும் பிரபலமடைந்த நாவல்கள் 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாவது வழக்கம்.
தற்போது, ஒபாமாவின் உரைகள் அடங்கிய புத்தகம், இரண்டே மாதங்களில் நான்கு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி பெரும் சாதனை படைத்துள்ளது. ஜப்பானில் ஆங்கில மொழியை பாடமாக எடுப்பவர்கள், ஒபாமாவின் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு புத்தகத்தைøயே, கற்றுக்கொள்வதற்காக தேர்வு செய்கின்றனர்.
பெரும்பாலான புத்தகக்கடைகளில், ஆங்கில மொழிப்பிரிவு புத்தகங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் அச்சிடப்பட்டு, பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘அமெரிக்க அதிபர்கள், அதிபர் வேட்பாளர்கள் பேச்சுக்கள்’ என்ற தலைப்பிலும் புத்தகங்கள் உள்ளன. இவற்றை, ஆங்கிலம் கற்றுக் கொள்ள விரும்பும் ஜப்பானியர்கள் விரும்பி வாங்குகின்றனர். ஒபாமாவின் பேச்சுக்கள், எளிதான, நல்ல ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி, அதேநேரம் மக்களை கவரக்கூடிய வகையில் அமைந்திருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
“ஒபாமாவின் ஆங்கில உரைகள் என்னை கவர்ந்ததைப் போலவே மற்றவர்களையும் கவரும் என்று எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்புக்கு மேலாக அதிகளவில் இந்த புத்தகம், பாட நூலாக மாறியுள்ளது,” என்று கூறினார், இதை தயாரித்த யுசோ யமமோமோட்டோ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us