தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை பல்கலை., சார்பில் கல்வி சேவைக்காக எப்.எம்., துவக்கம்

மதுரை பல்கலை., சார்பில் கல்வி சேவைக்காக எப்.எம்., துவக்கம்

மதுரை பல்கலை., சார்பில் கல்வி சேவைக்காக எப்.எம்., துவக்கம்


UPDATED : ஜன 23, 2009 12:00 AM

ADDED : ஜன 23, 2009 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2009 12:00 AM ADDED : ஜன 23, 2009 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு


நாகமலைபுதுக்கோட்டை:
மதுரை காமராஜ் பல்கலை., சார்பில் கல்வி சேவைக்காக பிரத்யேக எப்.எம்., துவக்கப்படுகிறது.
நாடு முழுவதும் 21 நகரங்களில் கல்வி சேவைக்கென எப்.எம்., துவங்கப்பட்டுள்ளன. 2000வது ஆண்டு முதல் இக்னோ பல்வேறு பல்கலை.,களுடன் இணைந்த இந்த சேவையை வழங்கி வருகிறது. மதுரை காமராஜ் பல்கலை., மற்றும் இக்னோ இணைந்து பல்கலை., வளாகத்தில் ‘ஞான்வாணி’ என்ற எப்.எம்.ஐ துவக்கவுள்ளன.
இதுகுறித்து துணைவேந்தர் கற்பககுமாரவேல் கூறுகையில் ‘ஞான்வாணி துவங்குவதற்காக இக்னோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து கருவிகளும் மதுரை வானொலி நிலையத்திற்கு வந்துவிட்டன.
இந்த வாரம் டில்லியில் இருந்து இன்ஜினியர்கள் வருகின்றனர். அவர்கள் பல்கலை., மற்றும் மதுரை வானொலி நிலையத்திற்கு இடையே ஒலிபரப்பு தொடர்பை ஏற்படுத்தவுள்ளனர். ‘ஞான்வாணி’ ஒலிபரப்பு பல்கலை.,யில் இருந்து 60 கி.மீ., சுற்றளவிற்கு கிடைக்கும். தினமும் 6 மணிநேரம் ஒலிபரப்பப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us