தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களே வாருங்கள் விண்ணப்பிக்கலாம்

சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களே வாருங்கள் விண்ணப்பிக்கலாம்

சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களே வாருங்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM

ADDED : ஜூன் 17, 2014 11:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM ADDED : ஜூன் 17, 2014 11:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர்: சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: படித்த இளைஞர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற, தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டத்தை 2012-13ம் ஆண்டு முதல் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு தொழில் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வங்கிகள், தொழில் முதலீட்டுக்கழகம் மூலம் 25 லட்சம் கடன் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அளவில் 1000 தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் கல்வி. வயது வரம்பு குறைந்தபட்சம் 21வயது. அதிக பட்சம் பொது பிரிவினருக்கு 35 வயதும், சிறப்பு பிரிவினருக்கு 45 வயதும் இருக்க வேண்டும்.

திட்ட மதிப்பீட்டில் தொழில் முனைவோரின் பங்களிப்பு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருக்க வேண்டும். ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட தொழில் மையத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொழில் தொடங்குவதற்கான அனைத்து அத்தாட்சியுடன் மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு மேலாளரிடம் கடன் ஒப்பளிப்பு பெற்றபின் ஒரு மாத கால தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் வங்கியின் மூலம் கடன் பட்டுவாடா செய்யப்பட்டு தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளுடன் 25 சதவீதம் மானியம் வழங்க மாவட்ட தொழில் மையம் உதவுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us