வெளிநாட்டினர் வேலை பெற நெதர்லாந்து அரசின் சலுகைகள்
வெளிநாட்டினர் வேலை பெற நெதர்லாந்து அரசின் சலுகைகள்
UPDATED : ஜன 24, 2009 12:00 AM
ADDED : ஜன 24, 2009 05:36 PM
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் ஒன்று. இந்தியாவில் உயர் கல்வி முடித்திருப்பவர்களுக்கு நெதர்லாந்து சிறந்த பணி வாய்ப்புகளைத் தருகிறது.
உயர் கல்வி முடித்திருப்பவர்கள் நெதர்லாந்தில் ஓராண்டு தங்கியிருந்து வாய்ப்புகளைத் தேடுவதற்கான அனுமதியையும் நெதர்லாந்து அரசு தருகிறது. மூன்று ஆண்டுகளுக்குள் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். ஆனால் இந்தப் படிப்பானது நெதர்லாந்தின் கல்வித் தரக் கட்டுப்பாட்டு அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டதாக இருப்பது அவசியம். இதை www.idw.nl தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக நெதர்லாந்தில் பணி வாய்ப்பு பெற டச்சு மொழியை அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தில் மட்டுமே விண்ணப்பத்தை நாம் தயார் செய்ய வேண்டும். அங்கே தங்கி வேலை பெறும் வரை ஆகும் செலவை நம்மால் செய்ய முடியும் என்பதற்கான ஆதாரங்களும் அவசியம். வேலை பெற்று விட்டால் நமது குடும்பத்தை அங்கே அழைத்துச் செல்வதற்கான அனுமதி தரப்படுகிறது.
சிறப்பான தொழிற்கல்வியில் பட்ட மேற்படிப்பு படித்திருப்பவர்களுக்கு நெதர்லாந்தில் பணி வாய்ப்புகள் இருக்கின்றன.
