தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜூன் 18ல் பிளஸ் 2 மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு

ஜூன் 18ல் பிளஸ் 2 மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு

ஜூன் 18ல் பிளஸ் 2 மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு


UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM

ADDED : ஜூன் 17, 2014 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM ADDED : ஜூன் 17, 2014 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: நாளை (ஜூன் 18) தொடங்க உள்ள மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வுக்கு அனுமதி சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு நாளை தொடங்குகிறது. தேர்வு எழுதுபவர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் நுழைவு சீட்டுக்களை பதிவிறக்கம் செய்யலாம்.

அப்போது தோன்றும் பக்கத்தில் மார்ச் 2014 மற்றும் அவர்களது பிறந்த தேதி பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதி சீட்டு திரையில் தோன்றும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறை தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று, தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்து தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்.

அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை கொண்ட பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வர வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us