தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் நேற்று ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான ஆய்வுக்கூடம், குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து கல்லூரி முதல்வரிடம் பல முறை புகார் செய்த போது, நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதில் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று நண்பகல் ஒரு மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாலகுரு, தாசில்தார் பழனிக்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும், என கூறியதன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us