மத்திய அரசின் உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
மத்திய அரசின் உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : ஜன 25, 2009 12:00 AM
ADDED : ஜன 25, 2009 11:08 AM
இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வியாண்டில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வீதமும், 4, 5ம் ஆண்டுகளில் 2,000 (10 மாதங்கள்) ரூபாயும் வழங்கப்படும்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், இந்த உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், பெற்றோர்களுடைய ஆண்டு வருவாய் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை, www.tn.gov.in/dge, www.tngdc.in ஆகிய இணையதளங்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார்.
