நேரடி 2ம் ஆண்டு பொறியியல் சேர்க்கை: நாளை கலந்தாய்வு துவக்கம்
நேரடி 2ம் ஆண்டு பொறியியல் சேர்க்கை: நாளை கலந்தாய்வு துவக்கம்
UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM
ADDED : ஜூன் 18, 2014 12:47 PM
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 19ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில்நுட்பக்கல்வி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி, சுயநிதி கல்லூரி ஆகியவற்றில் 2014-15ம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 19ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.
பி.எஸ்.சி., விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர், மாற்றுத்திறனாளிகள் 19ம் தேதி; ரசாயனம், ஜவுளி, தோல் மற்றும் அச்சுப் பிரிவு 20ம் தேதி; சிவில் பிரிவு 20- 22ம் தேதி; மெக்கானிக்கல் பிரிவு 23-27ம் தேதி; எலக்ட்ரிக்கல் பிரிவு ஜூன் 27-லை 2ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண்ணில் மாறுதல் எதுவுமிருந்தால், கலந்தாய்வு மையத்திற்கு முன்கூட்டிய நாளில் வர வேண்டும். விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வு அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதம் கிடைக்காவிட்டாலும் தகுதியுள்ள மாணவர்கள், அறிவிக்கப்பட்ட தேதிகளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
