இந்தியா ஒரு காலத்தில் உயர்கல்வி உலகின் தலைவன்: பிரணாப் முகர்ஜி
இந்தியா ஒரு காலத்தில் உயர்கல்வி உலகின் தலைவன்: பிரணாப் முகர்ஜி
UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM
ADDED : ஜூன் 18, 2014 02:15 PM
பெங்களூர்: இந்திய நாடு, கி.மு. 3ம் நூற்றாண்டு முதல், தக்சஷீலா பல்கலையில் தொடங்கி, கி.பி. 12ம் நூற்றாண்டு நாளந்தா பல்கலைக்கழகம் வரை, உயர்கல்வி துறையில், உலகளவில் தலைவனாக திகழ்ந்தது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமை பொங்க கூறியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி கூறியதாவது: புத்திசாலியான மாணவர்கள் மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியுடன், மேலான நோக்கம் மற்றும் சீர்திருத்தம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியுள்ளது.
பலமான போட்டி நிலவும் இந்த உலகில், நாடுகளின் கமிட்டியில், ஏன் நம்மால் ஒரு பொருத்தமான இடத்தைப் பிடிக்க முடியாது? நாம் கட்டாயம் அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தில், ஒரு உயர்ந்த இடத்தில் நமக்கான இருப்பு உள்ளது.
எதுவுமே தானாக கிடைத்து விடாது. நாம்தான் முயன்று பெற வேண்டும். சர்வதேச தரவரிசைப் பட்டியல்களில் கூறியுள்ளபடி, நமது கல்வி நிறுவனங்கள் சர்வதேச தரத்துடன் இல்லை என்று கூறலாகாது.
மாறாக, அந்த ரேங்கிங் பட்டியல்கள் கவனமுடன் ஆராயப்பட்டு, அதன்மூலம், நமது குறைகள் சரிசெய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
