தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கல்

மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கல்

மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கல்


UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM

ADDED : ஜூன் 20, 2014 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM ADDED : ஜூன் 20, 2014 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளியில், ப்ளஸ் 2 படித்த, 1,270 மாணவ, மாணவியருக்கு, அரசின் விலையில்லா லேப்டாப்களை, திருச்சி எம்.பி., குமார், வழங்கினார்.

திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில், திருச்சி எம்.பி., குமார் தலைமையில், அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இப்பள்ளியில், ப்ளஸ்2 படித்த, 511 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 438 பேருக்கும், மிளகுபாறை ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 69 பேருக்கும், தில்லை நகர், கி.அ.பெ., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 252 பேருக்கும், அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us