குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM
ADDED : ஜூன் 20, 2014 12:14 PM
பழவேற்காடு: அரசு பள்ளியில், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததை கண்டித்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழவேற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், 800 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இது தொடர்பாக, இந்திய மாணவர் சங்கத்தின், மாவட்ட துணை தலைவர் ராஜ்கமல், தலைமையில், மாணவர்கள் பள்ளிக்கு அடிப்படை வசதி செய்துதர வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்தனர். பழவேற்காடு, பஜார் பகுதியில், நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவா கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வகுப்பறையில் குடிநீர் வசதி செய்து கொடு, போதுமான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்து, காமர்ஸ் மற்றும் கணினி பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர்களிடம் தவறாகவும், இழிவாகவும் பேசும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
