UPDATED : ஜன 27, 2009 12:00 AM
ADDED : ஜன 27, 2009 10:19 AM
அ நிறம் | அளவு
மைசூரில் கல்லூரி ஒன்றின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை துவக்கி வைத்த அப்துல் கலாம் கூறியதாவது:
ஒழுக்கமான மக்களே தற்போதைய தேவை. இளைஞர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ, 17 வயதிற்கு மேல் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும். நாட்டில் உள்ள இளைஞர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 25 வயதிற்கு குறைவானவர்கள்.
அவர்களுக்கு, ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்பது போதிக்கப்பட வேண்டும். அப்போது தான் 2020ம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற அவர்கள் உதவியாக இருப்பர். மாணவர்கள் எதிர்கால தலைவர்களாகும் வகையில், அவர்களுக்கு அறிவையும், மதிப்புமிக்க விஷயங்களையும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் போதிக்க வேண்டும். இவ்வாறு கலாம் கூறினார்.
