தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு
தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு
UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM
ADDED : ஜூன் 21, 2014 10:53 AM
ராமநாதபுரம்: மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் துரை கூறியதாவது:
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் எம்.ஏ.(தொழிலாளர் மேலாண்மை) தொழிலாளர் நிர்வாகத்தில் ஓராண்டு பகுதி நேர முதுகலை பட்டயப்படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ.,) மற்றும் தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்(டி.எல்.எல். மற்றும் ஏ.எல்) குறித்த ஓராண்டு வார இறுதி பட்டயபடிப்பு ஆகியவைகளுக்கு விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் ரூ. 200 செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி.,-எஸ்.டி. மாணவர்கள் ஜாதிச்சான்றிதழ் நகலை இணைத்து ரூ. 100க்கு விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்-5, காமராஜர் சாலை, சென்னை - 600 005ல் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 044-28440102 அல்லது 28445778ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
