தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச மடிக்கணினி பழுது நீக்கும் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

இலவச மடிக்கணினி பழுது நீக்கும் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

இலவச மடிக்கணினி பழுது நீக்கும் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM

ADDED : ஜூன் 21, 2014 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM ADDED : ஜூன் 21, 2014 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: நேரு யுவகேந்திரா சார்பில், இலவச லேப்டாப் பழுது நீக்குதல் மற்றும் மகளிர் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்க உள்ளதால் பயிற்சியில் சேர விரும்புவோர் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மையம், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி. அணையில் உள்ள இந்திய வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் ஜூலை மாதத்தில் லேப் டாப் பழுது நீக்குதல் மற்றும் பெண்களுக்கான கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 30 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பயிற்சியில் கலந்து கொள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானதாகும்.

பயிற்சியின் போது மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிடர், மலைசாதி பிரிவினர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வேலை இல்லாத பட்டதாரிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு பயிற்சியில் சேர முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வரும் 30ம் தேதிக்குள் "மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், நேரு இளையோர் மையம், 515, காமராஜர் நகர் (ராயக்கோட்டை ரோடு) பெத்ததாளப்பள்ளி அஞ்சல், கிருஷ்ணகிரி-635002" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இதுகுறித்து, மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் 04343-326444 என்ற டெலிஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us