UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM
ADDED : ஜூன் 23, 2014 11:24 AM
சிவகாசி: மொபைல் போன் இல்லாத வீடு என்ற நிலை மாறி, மொபைல் போன் இல்லாத நபரே இல்லை என்ற நிலை வந்து விட்டது.
இந்தியாவில் 73கோடி மொபைல் சந்தாதாரர்கள் உள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. மொபைல் போன் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளது. ஆனால் இவை பழுதடைந்து விட்டால், சரி செய்ய சரியான ஆட்கள் இன்றி பணம் விரையமாகிறது.
மத்திய அரசின் "நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேஷன்" நிறுவனம் "ஸ்டார்" திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் 45 நாட்கள் மாணவர்கள் திறமை வளர்ந்து கொள்ள பல்வகை பயிற்சி அளிக்கப்படுகிறது. சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மொபைல் போன் சர்வீஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் உதவி தொகை ரூ.2500 பெறுகின்றனர். பயிற்சி கட்டணமும் இல்லை.
சென்னை "புரவைடர்ஸ் ஸ்கில் அகடாமி" வல்லுநனர்கள் பயிற்சி அளித்தனர். 75 பேர் தேர்ச்சி பெற்றனர். பயிற்சியை முதல்வர் நந்தகுமார் துவக்கி வைத்தார். தொழில் நுட்ப வல்லுனர்ஜெயஸ்ரீ பேசினார். அடுத்த கட்டமாக கல்லூரியில் உள்ள மின்னியல், மின்னணுவியல், தொலை தொடர்பியல் துறை மாணவர்கள் 90 பேர் பயிற்சி பெற உள்ளனர்.
