தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM

ADDED : ஜூன் 23, 2014 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM ADDED : ஜூன் 23, 2014 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அமெரிக்க - இந்திய கல்வி பவுண்டேஷனிலுள்ள EducationUSA மையம், 2014-15ம் கல்வியாண்டில், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற்று, அந்நாட்டிற்கு புறப்படும் இந்திய மாணவர்களுக்காக, பயணத்திற்கு முந்தைய ஓரியண்டேஷன் புரோகிராமை(Pre-departure Orientation) ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஜுன் 26ம் தேதி, வியாழக்கிழமை, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள சவேரா ஹோட்டலில், காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

டிராவல் பிளானிங், அமெரிக்காவில் நுழைந்தவுடன் முதல் சில நாட்களில் நடைபெறும் புதிய வாழ்க்கைப் பழக்கம், F1 விசா விதிமுறைகள், அமெரிக்காவின் சமூக மற்றும் கல்வி பண்பாடு உள்ளிட்ட பல்வேறான தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சியில், பேச்சாளர்களாக, சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தூதர்(Vice Consul), அமெரிக்கப் பல்கலைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் அமெரிக்காவில் தற்போது படித்துக்கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற உள்ளனர்.

இந்தியாவிலிருந்து புதிதாக அமெரிக்கா செல்லும் மாணவர்கள், அங்குள்ள பண்பாட்டுச் சூழலைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் நோக்கத்தோடுதான், இந்த Pre-departure Orientation Programme ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

முன்னதாகவே பதிவு செய்து கொள்வதன் மூலமே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும். விரிவான தகவல்களுக்கு usiefchennai@usief.org.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 044 - 28574134 என்ற எண்ணிகில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.facebook.com/EducationUSAChennai என்ற வலைதளம் செல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us