UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM
ADDED : ஜூன் 23, 2014 02:29 PM
கடந்த 2006ம் ஆண்டு, லயோலா கல்லூரியில், ஊடக கலைகள் படிப்பை வழங்குவதற்கான தனித் துறை தொடங்கப்பட்டது.
தமிழ் ஊடகங்களில் பணியாற்றுவதற்கேற்ற நபர்களை உருவாக்கும் நோக்கத்துடன் முதுநிலை மீடியா ஆர்ட்ஸ் படிப்பு தொடங்கப்பட்டது.
இப்படிப்பில், பாடம், பயிற்சி மற்றும் தேர்வு ஆகிய அனைத்தும் தமிழிலேயே இருக்கும் என்பது முக்கிய சிறப்பம்சம். இதனால், நவீன ஊடக அம்சங்களைப் பற்றி, தாய்மொழியிலேயே கற்றுக் கொள்ளலாம்.
இப்படிப்பில் சேர்வதற்கு, ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேசமயம், தமிழை, முதல் அல்லது இரண்டாவது பாடமாக படித்திருக்க வேண்டும். இப்படிப்பில், ஆண்-பெண் இருபாலரும் படிக்கலாம்.
கட்டணம்
4 பருவங்கள் கொண்ட இந்த 2 ஆண்டு படிப்பில், ஒரு பருவத்திற்கு, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கட்டண சலுகையும் உண்டு.
விரிவான விபரங்களுக்கு SLJK.SLJK@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
