தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கலந்தாய்வு - மாணவர்களுக்காக சிறப்பு பஸ்கள்

பொறியியல் கலந்தாய்வு - மாணவர்களுக்காக சிறப்பு பஸ்கள்

பொறியியல் கலந்தாய்வு - மாணவர்களுக்காக சிறப்பு பஸ்கள்


UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM

ADDED : ஜூன் 24, 2014 05:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM ADDED : ஜூன் 24, 2014 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கு செல்லும் மாணவர்களுக்காக, சென்னை, கோயம்பேடு, பெருங்களத்தூரில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து, சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் (எம்.டி.சி.,) வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்தில், நடக்கும் பொறியியல் கலந்தாய்வுக்கு, செல்லும் மாணவர்களின் வசதிக்காக, 23ம் தேதி முதல், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, காலை 5:00 மணி முதல், 10 நிமிட இடைவெளியில், கோயம்பேடு - திருவான்மியூர் வழித்தடத்தில், 10 சிறப்பு பஸ்கள் (தடம் எண்: டி 70) இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள், வடபழனி, அசோக் பில்லர், சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக செல்லும். பெருங்களத்தூரில் இருந்து, காலை 5:00 மணி முதல், 10 நிமிட இடைவெளியில், பெருங்களத்தூர் - பிராட்வே வழித்தடத்தில், 10 சிறப்பு பேருந்துகள் (தடம் எண்: 21 ஜி) இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக செல்லும்.

இவை தவிர்த்து, தாம்பரம், கிண்டி, வடபழனி, சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், தி.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, 300 மாநகர பஸ்கள், அண்ணா பல்கலைக்கழகம் வழியாக, ஏற்கனவே இயக்கப்படுகின்றன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us