டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலி
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலி
UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM
ADDED : ஜூன் 24, 2014 05:34 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.
இத்தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்டது. இதன் தலைவராக இருந்த நவநீதகிருஷ்ணன் ராஜ்சபா இடைத்தேர்லுக்கான அ.தி.மு.க., உறுப்பினராக போட்டியிடுவதால் அப்பதவியை ராஜினாமா செய்தார். தலைவர் பதவி காலியாகி 9 நாட்கள் ஆகிறது.
புதிய தலைவர் நியமிக்கப்படாததால், தேர்வு முடிவு அறிவிப்பு, புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதேபோல தேர்வாணையத்தில் 7 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. தேர்வாணை முடக்கம் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் முடக்கியுள்ளது.
