தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடஒதுக்கீடு அடிப்படையிலேயே பட்டியல் தயாரிப்பு: அண்ணாமலை பல்கலை

இடஒதுக்கீடு அடிப்படையிலேயே பட்டியல் தயாரிப்பு: அண்ணாமலை பல்கலை

இடஒதுக்கீடு அடிப்படையிலேயே பட்டியல் தயாரிப்பு: அண்ணாமலை பல்கலை


UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM

ADDED : ஜூன் 24, 2014 05:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM ADDED : ஜூன் 24, 2014 05:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்விற்கு, தமிழக அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில்தான் பட்டியல் தயாரிக்கப்பட்டு நடக்கிறது என, பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ்., 150 இடங்கள் மற்றும் பி.டி.எஸ்., 100 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு ஜுன் 25ம் தேதி, பல்கலைக் கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது. மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் 7,421 வரப்பெற்று, இதற்கு தர வரிசை (ரேங்க்) பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 1,692 பேருக்கு முதல் கட்ட கலந்தாய்விற்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட கலந்தாய்வு பட்டியலில் எஸ்.சி., - எஸ்.டி., அருந்ததியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் ஆகியவைக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. பி.சி., - எம்.பி.சி., மற்றும் ஓ.சி.,க்கு தனித்தனியாக பட்டியல் வெளியிடாமல், இவைகளுக்கு பொது ரேங்க் பட்டியல் வெளியிட்டு, பொது கலந்தாய்வு என பல்கலைக் கழக வெப்சைட்டில் வெளியிடப்பட்டது. இதற்கு மா.கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு எழுந்தது. அதனால் கலந்தாய்வு பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பல்கலைக்கழக புதிய பட்டியல், பொது பிரிவினர் (ஓ.சி.,) 115, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.,) 1,063, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.,) 269, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் (பி.சி.எம்.,) 69, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.,) 133, தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் (எஸ்.சி.ஏ.,) 21, பழங்குடியினர் (எஸ்.டி.,) 13, மாற்றுத் திறனாளிகள் 9 என பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை நிரப்ப போதுமான அளவில் அனைத்து பிரிவினரைச் சேர்ந்தவர்களும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பி.சி., - எம்.பி.சி., - பி.சி.எம்., - எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., - டி.என்.சி., ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு கூடுதலாக அவர்களின் தரவரிசைப் பட்டியல் படி, பொது பிரிவிலும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

எந்த ஒரு இடஒதுக்கீடு பிரிவிலும், மாணவர்கள் சேர்க்கை இடம் காலியாக இருந்தால், அந்த பிரிவு மாணவர்களைக் கொண்டுதான் 2ம் கட்ட கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்படும். மருத்துவ கல்வி இயக்ககம், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம் ஆகியவைகளால் பின்பற்றப்படும், அதே வழிமுறைகளைதான் அண்ணாமலை பல்கலைக்கழகமும் பின்பற்றுகிறது.

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை பின்பற்றியும் நடக்கிறது. மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் தேதி, இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டு விரைவு தபால் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us