தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவீன உள்விளையாட்டரங்கம் இருந்தும் பயனில்லை - இது பாரதியார் பல்கலையின் அவலம்

நவீன உள்விளையாட்டரங்கம் இருந்தும் பயனில்லை - இது பாரதியார் பல்கலையின் அவலம்

நவீன உள்விளையாட்டரங்கம் இருந்தும் பயனில்லை - இது பாரதியார் பல்கலையின் அவலம்


UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM

ADDED : ஜூன் 24, 2014 05:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM ADDED : ஜூன் 24, 2014 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலையில், ரூ.6.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டரங்கத்தை, கடந்தாண்டு பெயரளவில், முதல்வர், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்தார். ஆனால், போட்டிகள் நடத்தமுடியாமல் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

கோவை மருதமலை ரோட்டிலுள்ள பாரதியார் பல்கலை, 1982ல் துவங்கப்பட்டு, 25 ஆண்டு வெள்ளி விழாவையும் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த, 2005ல் பல்கலை துணைவேந்தராக இருந்த சிவசுப்ரமணியன் எடுத்த முயற்சியால் துவக்கத்தில், ரூ.3 கோடி செலவில், உள்விளையாட்டரங்கம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, ஒரு ஏக்கர் நில பரப்பு ஒதுக்கப்பட்டது.

அரங்கம், விளையாட்டு இடம் உள்ளிட்ட மொத்த பரப்பு, 32 ஆயிரம் ச.அடி., இதில், அரங்கம் அமைப்பதற்கென, 18 ஆயிரத்து 293 ச.அடி., இடம் ஒதுக்கப்பட்டது. விளையாட்டு போட்டிகள் நடத்தும் இடத்துக்கு மட்டும் 13 ஆயிரத்து 620 ச.அடி., நிலபரப்பு உள்ளது. பல்கலை துணைவேந்தர் சிவசுப்ரமணியன் 2005ல் துவங்கிய திட்டத்தை, 2007ல் துணை வேந்தராக இருந்த திருவாசகத்தின் முயற்சியால் தேவையான நிதி ஒதுக்கீடும் கிடைக்கப்பெற்று, அப்போதைய முதல்வர் கருணாநிதி, 2007 பிப்.,24ல் அடிக்கல் நாட்டினார். 2009ல் உள் விளையாட்டரங்கம் கட்டமைப்பு பணிகள் துரித முறையில் துவங்கினாலும், பல்வேறு பிரச்னைகளால் தடைப்பட்டு நின்றது.

கடந்த, 2012ல் துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன் பெருமுயற்சியால் மீண்டும் உள் விளையாட்டரங்கம் கட்டமைப்பு பணிக்காக திட்டமிடப்பட்டது. கட்டிமுடிக்க தேவையான பணவசதியும் திரட்டப்பட்டு, துரித பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், பணி முற்றுப்பெறாத சூழ்நிலையே நிலவியது. தற்போதுள்ள துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை, 2012ல் பதவியேற்றதும், நிதி பற்றாக்குறையால் தடைபட்டு இருந்த உள் விளையாட்டரங்க பணி முடிக்க தேவையான பண உதவியை பெற்று தந்தார்.

கடந்தாண்டு உள் விளையாட்டரங்கம் அமைக்கும் பணி, ரூ.6.25 கோடி செலவில், நிறைவடைந்தது. வெளிப்புறமும், உள்புறமும் பல வர்ண பெயிண்ட்கள் பூசப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. கடந்தாண்டு, 2013 மே 6ல் முதல்வர், வீடியோ கான்பரன்ஸ் முறையில், உள் விளையாட்டரங்கத்தை பெயரளவில் இயக்கி வைத்தார்.

ஆனால், இன்று வரை, ஓராண்டையும் தாண்டிய நிலையில் எந்த பயிற்சியும், போட்டிகளும் நடக்காதவண்ணம் காட்சி பொருளாக உள்ளது. உள் விளையாட்டரங்கத்தின் தரைப்பகுதி முற்றிலும் நவீனமுறையில் உட்டன்கோர்ட் என்றழைக்கப்படும் மரபலகையினால் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து மேல்கூரை 40 அடி உயரத்தில், போட்டிகள் நடக்கும்போது வெயில், மழையால் பாதிப்பு ஏற்படாதபடி கால்வனைசிங் என்ற ஒருவித உலோகத்தகட்டால் அமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களிலும் போட்டிகள் நடத்தும் வண்ணம் ப்ளட்லைட் என்ற மின்னொளி வெளிச்சமும் போடப்பட்டுள்ளது. கபடி, வாலிபால், கூடைப்பந்து, செஸ், கேரம், டேபிள்டென்னிஸ், இறகு பந்து, டென்னிகாய்ட் என பல்வேறு போட்டிகள் சிறப்பாக நடத்தமுடியும். 1000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்கும் வண்ணம் காலரி வசதி சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

மேலும், போட்டிகளில் பங்கேற்க வரும் 200 வீரர்-வீராங்கனைகள் தங்குவதற்கென அறைகளும் கட்டப்பட்டுள்ளன. தவிர, போட்டிகளின்போது சிறப்பு விருந்தினர்கள், மீடியாவை சேர்ந்தவர்கள் தங்கவும், கண்டுகளிக்கவும் தனித்தனியே வசதிகளுடன் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கழிவறைகளும், குளியலறைகளும் நவீன வதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே சென்னை, மதுரை உட்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே உள் விளையாட்டரங்க வசதிகள் உள்ளன.

கோவையை பொறுத்தமட்டில், சில தனியார் பள்ளி, கல்லுாரிகளில் மட்டுமே உள் விளையாட்டரங்க வசதிகள்  உள்ளன. பாரதியார் பல்கலை மக்கள் தொடர்பு அலுவலர் அன்பழகன் மற்றும் பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர் முருகவேல் கூறுகையில், "விரைவில், அகில இந்திய அளவில் கூடைப்பந்து போட்டி அல்லது இறகுப்பந்து போட்டிகள் நடத்தப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us