தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டி ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பாலிடெக்னிக் கல்லூரி விடுதி

கட்டி ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பாலிடெக்னிக் கல்லூரி விடுதி

கட்டி ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பாலிடெக்னிக் கல்லூரி விடுதி


UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM

ADDED : ஜூன் 28, 2014 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM ADDED : ஜூன் 28, 2014 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், விடுதி கட்டடம் கட்டி ஓராண்டிற்கும் மேல் ஆகியும் தற்போது வரை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிபொருளாக உள்ளது.

அரசு ஐ.டி.ஐ.க்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் போதிய கட்டட வசதி இருக்கும். ஆனால் சிறு சிறு விஷயங்களுக்காக அது பராமரிப்பு இல்லாமல், காட்சிப்பொருளாக இருக்கும். இதற்கு உதாரணமாக தேனி அருகே உள்ள கோட்டூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரி கடந்த 201011 கல்வி ஆண்டில் துவக்கப்பட்டது.

சிவில், மெக்கானிக் உட்பட 5 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒரு ஆண்டிற்கு 300 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.மொத்தம் 900 மாணவர்கள் இருப்பர். பாலிடெக்னிக் கல்லூரி துவங்கிய அடுத்த ஆண்டிலேயே வளாகத்தில் மாணவர்களுக்காக விடுதியும் கட்டப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த விடுதி, தற்போது வரை திறக்கப்படாமல்வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.

இதனால், மாவட்டத்தின் தொலைவில் இருந்து வரும் மாணவர்கள் விடுதியில் தங்க முடியாமல், அருகில் வீடு எடுத்து தங்கி வருகின்றனர். இதனால் ஏழை மாணவர்களுக்கு கூடுதல் செலவாகிறது. மாணவர்கள் வெளியில் தங்கி படிப்பதால், தவறான பழக்கவழக்கத்திற்கு ஆளாகி படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.

எனவே ஓராண்டிற்கும் மேலாக காட்சிபொருளாக உள்ள பாலிடெக்னிக் விடுதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலிடெக்னிக் அலுவலர்கள் கூறியதாவது: இந்த விடுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டது. தேவையான சமையல் பாத்திரங்கள், மாணவர்களுக்கு தேவையான கட்டில் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நிதிக்காக, விடுதி திறப்பு தமாமதமானது. தற்போது இதற்கான நிதி கிடைத்துள்ளது. விரைவில் இந்த விடுதி மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us