ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM
ADDED : ஜூன் 29, 2014 11:04 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலவிடுதிகளில் 2014-15ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையினரால் 67 மாணவர் விடுதிகளும், 26 மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகிறது. விடுதி மாணவ மாணவிகளுக்கு இலவச உணவு, உறைவிடமும், பள்ளி விடுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயில்பவர்களுக்கு மாதிரி வினா வங்கி, சிறப்பு வழிகாட்டியும் தமிழக அரசால் வழங்கப் படுகிறது.
இவ்விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை அருகில் உள்ள விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினி மற்றும் ஆதி திராவிடர் நல தனி தாசில்தார்கள் ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவும் விண்ணப்பத்தை பெறலாம். பள்ளி விடுதிகளில் சேர விரும்புவோர் வரும் ஜூலை 7ம் தேதிக்கு முன்னரும், கல்லூரி விடுதியில் சேர விரும்புவோர் ஜூலை 14ம் தேதிக்கு முன்னதாகவும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
