தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை துணைவேந்தர் யார்: எதிர்பார்ப்பில் கல்வியாளர்கள்

அழகப்பா பல்கலை துணைவேந்தர் யார்: எதிர்பார்ப்பில் கல்வியாளர்கள்

அழகப்பா பல்கலை துணைவேந்தர் யார்: எதிர்பார்ப்பில் கல்வியாளர்கள்


UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM

ADDED : ஜூன் 29, 2014 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM ADDED : ஜூன் 29, 2014 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் காரைக்குடி அழகப்பா பல்கலையில் துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அழகப்பா பல்கலை துணைவேந்தராக இருந்த சேது சுடலைமுத்து பதவிக்காலம் கடந்த செப். 26-ல் முடிந்தது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பலமுறை ஆலோசனை நடத்தியது.

பல்கலைகளில் துணைவேந்தருக்கு உரிய தகுதி மற்றும் நியமனம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதாலும், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாலும் துணைவேந்தரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஜூன் 17ல் சென்னையில் நடந்த தேர்வுக்குழு கூட்டம் முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்தது செல்லாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் யு.ஜி.சி. விதிகளின்படியும், சிறந்த நிர்வாகத்திறமை உடையவர்களையும் அழகப்பா பல்கலைக்கு துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே நிலவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us