தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு


UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM

ADDED : ஜூன் 29, 2014 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM ADDED : ஜூன் 29, 2014 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு செப். 19 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது என உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற (உத்தமம்) தலைவர் வாசு ரங்கநாதன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: உத்தம் நிறுவனம் சார்பில் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் செப். 19 முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் மக்கள் அரங்கம், கண்காட்சி, ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கணினித் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர். கணினியில் இயல்மொழி பகுப்பாய்வு என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படுகிறது. கணினித் தமிழில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை குறித்து மக்களுக்குக் கொண்டு செல்வதே மக்கள் அரங்கத்தின் நோக்கம்.

கணினி மற்றும் மொபைல் போன்களில் தமிழ் பயன்பாடு குறித்து அரங்கத்துக்கு வருவோருக்கு உடனுக்குடன் தெரிவித்து, அதன் பயன்பாட்டை மேம்படுத்த தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கணினித் தமிழ் மென்பொருள்கள், நூல்கள் மற்றும் வன்பொருள்கள் குறித்து, கண்காட்சி நடத்தப்படுகிறது.

 தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள், கணினித் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றனர். ஜூலை 15ம் தேதிக்குள் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.infitt.org/2014 என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இம்மாநாட்டுக்கு புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு வாசு ரங்கநாதன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us