தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுத்தமான குடிநீர், தரமான உணவு வழங்கக் கோரி போராட்டம்

சுத்தமான குடிநீர், தரமான உணவு வழங்கக் கோரி போராட்டம்

சுத்தமான குடிநீர், தரமான உணவு வழங்கக் கோரி போராட்டம்


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருச்சியிலுள்ள அரசு அம்பேத்கர் விடுதி மாணவர்கள், சுத்தமான குடிநீர், தரமான உணவு வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர்.

திருச்சி காஜாமலையில், அரசு அம்பேத்கர் மாணவர்கள் விடுதி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று காலை, விடுதியிலுள்ள, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், விடுதி முன் திரண்டு, கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் கலங்கிய நிலையில் சுகாதாமற்ற குடிநீர், தரமற்ற உணவு வழங்குவதாகவும், அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும், வார்டன் மறுப்பதாக கூறினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த, சமூகநலத்துறை அலுவலர் சாந்தாபாய், ஆர்.டி.ஓ., பஷீர், பொன்மலை உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us