தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை பதிவாளரை திரும்ப்பெற மறுத்துவிட்ட மத்திய மனிதவள அமைச்சகம்

பல்கலை பதிவாளரை திரும்ப்பெற மறுத்துவிட்ட மத்திய மனிதவள அமைச்சகம்

பல்கலை பதிவாளரை திரும்ப்பெற மறுத்துவிட்ட மத்திய மனிதவள அமைச்சகம்


UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM

ADDED : ஜூலை 04, 2014 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM ADDED : ஜூலை 04, 2014 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளரை திரும்பப் பெற, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மறுத்து விட்டது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளராக, மூன்றாண்டு காலத்திற்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் யதுவன்ஷி நியமிக்கப்பட்டார். பதவியேற்ற நாள் முதல் பல்கலை.,யில் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் ராஜிவ் யதுவன்ஷியை திரும்பப் பெற வேண்டும் என, பல்கலைக்கழக செயற்குழு கூட்டத்தில் அண்மையில் முடிவு எடுக்கப்பட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவாளருக்கு ஆதரவாக திரண்ட பல்கலை., ஊழியர்கள், துணைவேந்தர் சந்திராகிருஷ்ணமூர்த்தியை சந்தித்து, பதிவாளரை மாற்றக் கூடாது என வலியுறுத்தினர். ராஜிவ் யதுவன்ஷிக்கு பதிலாக, பல்கலையில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரை நியமித்து பல்கலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பதிவாளர் ராஜிவ் யதுவன்ஷி இட மாற்றத்திற்கு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us