தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவு மையங்கள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

சத்துணவு மையங்கள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

சத்துணவு மையங்கள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்


UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM

ADDED : ஜூலை 05, 2014 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM ADDED : ஜூலை 05, 2014 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: காணை ஒன்றிய சத்துணவு பொறுப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்களுக்கு, சத்துணவு மையங்களை பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

ஒன்றிய சேர்மன் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் இளங்கோ முன்னிலை வகித்தனர். பி. டி.ஓ., குமாரி வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ராதா  தலைமை தாங்கி பேசியதாவது: சத்துணவு பொறுப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பணியில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

சமையல் அறை மற்றும் உணவு பொருட்கள் சேமித்து வைக்கும் அறைகளை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும். அரிசி, காய்கறிகள் சரியான முறையில் சுத்தம் செய்து, சமைக்க வேண்டும். சமையலர்கள் மற்றும் உதவி யாளர்கள் சமைக்கும் போது, சமையல் உணவுப் பொருட்களை மூடி வைத்து பாதுகாக்க வேண்டும்.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் சமையல் பணியினை கண்காணிக்கவும், சுகாதார முறையில் உணவு வழங்குவதை சுழற்சி முறையில் கண்காணிக்கவும் வேண்டும். பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க, ஊராட்சி தலைவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்ட இயக்குனர் ராதா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us