UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM
ADDED : ஜூலை 05, 2014 12:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில், ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி 45வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள 531 பொறியியல் கல்லுாரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 45வது இடத்தை, விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையத்தில் உள்ள, ஐ.எப்.இ.டி.,பொறியியல் கல்லுாரி பிடித்துள்ளது.
விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள ஒன்பது மாவட்டங்களை ஒப்பிடுகையில், ஐ.எப்.இ.டி.,பொறியியல் கல்லுாரி முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013-14 கல்வியாண்டில், இங்கு படித்த 348 மாணவர்கள், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
