தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/300 மாணவர்களுக்கு டி.சி.எஸ்., நிறுவனத்தில், வேலை வாய்ப்பு திறன் பயிற்சி

300 மாணவர்களுக்கு டி.சி.எஸ்., நிறுவனத்தில், வேலை வாய்ப்பு திறன் பயிற்சி

300 மாணவர்களுக்கு டி.சி.எஸ்., நிறுவனத்தில், வேலை வாய்ப்பு திறன் பயிற்சி


UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM

ADDED : ஜூலை 05, 2014 01:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM ADDED : ஜூலை 05, 2014 01:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் படிக்கும், 300 மாணவர்கள், டி.சி.எஸ்., நிறுவனத்தில், வேலை வாய்ப்பு திறன் பயிற்சி பெற, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது.

சமூக, பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வந்து, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், பி.இ., படித்துக் கொண்டிருக்கும், 300 மாணவர்கள், வேலை வாய்ப்பு திறன் பெற, டி.சி.எஸ்., நிறுவனத்துடன், அண்ணா பல்கலை ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, 5 குழுக்களாக, ஒரு குழுவிற்கு, 60 மாணவர்கள் வீதம், 300 பேர், டி.சி.எஸ்., நிறுவனத்தில், 200 மணி நேரம் இலவச பயிற்சி பெறுவர். தகவல் தொடர்பு திறன், வேலை வாய்ப்பிற்கு ஏற்ற, இதர திறன்கள் குறித்து, மாணவர்களுக்கு, டி.சி.எஸ்., நிறுவனம், பயிற்சி அளிக்கும்.

ஏழாவது, செமஸ்டர் வரை, எந்த பாடத்திலும் தோல்வி அடையாமல், 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும், இந்த பயிற்சிக்கான செலவை, டி.சி.எஸ்., நிறுவனமே ஏற்கும் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us