UPDATED : ஜூலை 06, 2014 12:00 AM
ADDED : ஜூலை 06, 2014 11:44 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் நடத்தப்படும் ஆய்வு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 25.76 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் செந்தில்குமார் "பிரிக்சன் வெல்டிங்" என்ற ஆய்வினை தயாரித்து அனுப்பியிருந்தார். இதற்கு மத்திய அரசு ரூ. 25.76 லட்சம் வழங்கியுள்ளது. இதன் மூலம் புதிய ஆய்வுகளும், மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
துறைத்தலைவர் செந்தில்குமாரை கல்லூரி தலைவர் குப்புச்சாமி, இயக்குனர்கள் சரவணன், சம்பத்குமார், கல்லூரி முதல்வர் ஹரிகுமார் பாராட்டினர்.
