UPDATED : ஜூலை 06, 2014 12:00 AM
ADDED : ஜூலை 06, 2014 12:17 PM
திருச்சி: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் சார்பில் பெண்களுக்கான இலவச அழகு கலைப்பயிற்சி நாளை 7ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்க செயலாளர் மல்லிகா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் பெண்களுக்கான பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
அதன் அடிப்படையில் பெண்களுக்கு அழகு கலைப்பயிற்சியும், சுயஉதவிக்குழு பெண்களுக்கு அலங்கார பொம்பை, பிறந்தநாள் வாழ்த்து பொம்மைகள், மலர் கொத்து தயாரித்தல், பல்வேறு வடிவங்களில் மெழுகுவர்த்தி மற்றும் மெழுகினால் ஆன கைவினை பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சிகள் நாளை 7ம் தேதி தொடங்க உள்ளது.
பயிற்சிக்கு பின் அரசு திட்டங்கள் மூலம் தொழில் துவங்க, மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆவன செய்யப்படும். ஆர்வமுள்ளவர்கள் திருச்சி, கண்டோன்மெண்ட், பாரதியார் சாலை, செயிண்ட்பால்ஸ் காம்ப்ளக்ஸில் உள்ள தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தை 0431-4200040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
