கடல்துறைப் பொறியியல் பட்டதாரிகளுக்கு கப்பல்களில் பயிற்சி: கப்பல் வாரியம் முடிவு
கடல்துறைப் பொறியியல் பட்டதாரிகளுக்கு கப்பல்களில் பயிற்சி: கப்பல் வாரியம் முடிவு
UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM
ADDED : ஜூலை 08, 2014 10:50 AM
மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய கப்பல் துறைக்கு தகுதியான பொறியாளர்கள் அதிகம் தேவை. இங்கு பணியாற்றும் பொறியாளர்கள் ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வருமானவரி கட்டவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நமது மரைன் இன்ஜினியர்கள் வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றினால் என்.ஆர்.ஐ. என்ற அடிப்படையில் அவர்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இந்திய மரைன் பொறியாளர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பிரச்னை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. வெளியாகவுள்ள மத்திய பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கப்பல் தொழிலில் நம் நாட்டின் பங்களிப்பு 8 சதவீதமாக உள்ளது. இதை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும். மரைன் இன்ஜினியரிங் படித்து வெளியேறும் மாணவர்களுக்கு போதிய தொழில்நுட்ப செய்முறை பயிற்சி இல்லை. இதனால் திறமை அடிப்படையில் தலா 90 மரைன் இன்ஜினியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 வர்த்த கப்பல்களில் நேரடி பயிற்சி அளிக்க உள்ளோம் என்றார்.
