தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ இருட்டறை உதவியாளர் பணி: பதிவுமூப்பு விபரம் வெளியீடு

மருத்துவ இருட்டறை உதவியாளர் பணி: பதிவுமூப்பு விபரம் வெளியீடு

மருத்துவ இருட்டறை உதவியாளர் பணி: பதிவுமூப்பு விபரம் வெளியீடு


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: மருத்துவ இருட்டறை உதவியாளர் பணியிடத்திற்கு பதிவு மூப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மகாராணி கூறியதாவது: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட இருட்டறை உதவியாளர் பணியிடத்திற்கு மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்திற்கு பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சியுடன் இருட்டறை உதவியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஓராண்டு ரேடியாலஜிக்கல் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

2013 ஜூலை 1ல் பொதுப் பிரிவினர் எனில் 30 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் - அருந்ததியினர், பழங்குடியினர் எனில் 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் - இதரர், பிற்படுத்தப்பட்டோர் - முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனில் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

பரிந்துரை விபரம்

2014 ஜூன் 28 வரை பதிவு செய்துள்ள அனைத்து வகுப்புகளை சேர்ந்த முன்னுரிமை பிரிவினர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர்-அருந்ததியினர் பெண்களுக்கு 2012 டிச.17 வரையும், மிகவும் பிற்பட்டோர் இருபாலருக்கு 2010 மார்ச் 1 வரையும், பிற்படுத்தப்பட்ட-முஸ்லிம் பெண்களுக்கு 2009 செப்.24 வரையும், இருபாலருக்கு 2007 செப்.3 வரையும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட-இதரர் பிரிவில் இருபாலருக்கு 2005 பிப்.22 வரையும், பொது பிரிவினர் இருபாலருக்கு 2007 அக்.12 வரையும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தகுதியுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்வி சான்றுகளுடன் நாளை (ஜூலை 10)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவுமூப்பு விபரத்தை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us